தனுஷை 'தலைவா' என அழைத்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ’தலைவா’ என அவரது ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் வழக்கம் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனுஷை ’தலைவா’ என அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சாரா அலி கான் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ’தலைவா’ தனுஷுடன் ஜிம்மில் ஒரு பயிற்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த வீடியோவின் பின்னணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தில் இடம்பெற்ற ’மரணம் மாஸ்ஸூ மரணம்’ என்ற பாடலின் பின்னணி ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் ஏற்கனவே நடித்த பாலிவுட் திரைப்படமான ’ராஜண்ணா’ படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார் என்றதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

விஜய்யின் 'மாஸ்டர்': மிகப்பெரிய தொகைக்கு ஓடிடியிடம் பேச்சுவார்த்தையா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு கடந்த ஏப்ரல் மாதமே தயாராகி விட்ட போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.

கமல் முன் குவிந்து கிடக்கும் பஞ்சாயத்துக்கள்: சாட்டையை சுழற்றுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்களுக்கு மேல் ஆன பின்னரும் கமல்ஹாசன் தவறு செய்யும் போட்டியாளர்களை இதுவரை கடுமையாக கண்டிக்கவில்லை என்றும், அவர் அறிவுரை என்ற பெயரில்

சிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறிய இன்னொரு பிரபல தமிழ் நடிகர்

கோலிவுட் திரையுலகில் உள்ள இளைய தலைமுறை நடிகர்கள் பலர் சிக்ஸ்பேக் வைத்து அசத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே

ஒரு Blood Test மூலம் புற்றுநோயை கண்டுபிடிக்கும் புது வசதி… மனிதக் குலத்தைக் காக்கும் அதிரடி கண்டுபிடிப்பு!!!

ஒரு ரத்தப் பரிசோதனையை செய்து 50 வகையான புற்றுநோயை அதுவும் அந்நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்கும்

கர்ப்பமான நிலையிலும் டான்ஸ் ஆடி அசத்தும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது