விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு டிராபிக் ராமசாமி உதவியா?

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

பிரபல சமூக சேவையாளர் டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்கி நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் நடிகை ரோஹினி, டிராபிக் ராமசாமியின் மனைவியாகவும், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், சீமான், குஷ்பு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர்

இந்த நிலையில் டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா என்பவர் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் 'இந்த படத்தின் கிளைமாக்ஸில் டிராபிக் ராமசாமி தனது அரசியல் வாரீசாக விஜய்யை கைகாட்டுவதாகவும், விஜய் ஒரு மாடர்ன் காந்தி என்று கூறுவது போன்ற காட்சி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமியின் செல்வாக்கு மற்றும் நேர்மையான இமேஜை விஜய்யின் அரசியல் வருகைக்கு பயன்படுத்த முயற்சிப்பதாகவும் பாத்திமா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் பாத்திமாவின் இந்த கருத்தை அருகில் இருந்த டிராபிக் ராமசாமி மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த கருத்தை கூறிய பாத்திமாவை டிராபிக் ராமசாமி அடிக்கும் காட்சியின் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படத்தில் பாத்திமா சொல்வது போல் அப்படியொரு காட்சி இல்லை என்று படக்குழுவினர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.