குழந்தைகள் படம் இயக்குகிறார் டிராஃபிக் ராமசாமி இயக்குநர்..!

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் என்று யாராவது உண்டா? அதுவும் குழந்தைகள் படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

உலகம் முழுவதும் குழந்தைகள் படங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அஞ்சலி, பசங்க, காக்கா முட்டை என்று குழந்தைகள் படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது மாமன்னன் எடுத்த மாரி செல்வராஜ் வாழை என்ற குழந்தைகள் படத்தை எடுத்து வருகிறார். இந்த வரிசையில் குழந்தைகள் படம் ஒன்றை இயக்குகிறார் டிராபிஃக் ராமசாமி படத்தின் இயக்குநர் விக்கி.

இப் படத்தைப் பற்றி அவர் கூறிய போது, ’கேள்விகளால் உலகை அழகாக்கியவர்கள் குழந்தைகள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்கும் போது அவர்களின் அறிவு விரிவடைகிறது. தொலைக்காட்சிகள் 90’களின் துவக்கத்திலும், இணையதளம் 90’களின் இறுதியிலும் தமிழகத்தில் பரவலாகத் தொடங்கின. இவை வீடு புகுந்து தமிழ்க் குடும்பங்களுக்குள் நுழைந்ததிலிருந்து புழுதியில் மண்ணுடன் மண்ணாக விளையாடிய குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. அதன் விளைவாக இப்போதுள்ள குழந்தைகளிடம் கேள்விகள் குறைந்துபோய் பதில்களாகவே நிறைந்து இருக்கிறது. இவர்களுக்கு உலகைப் பற்றி அனைத்துமே தெரிந்திருக்கிறது.

இப்படம் கூகுளும், யூடியூபும் தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்பு குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்த பொற்காலத்தையும், அவர்களின் உலகத்தையும் நகைச்சுவையாகச் சொல்லும் கிராமத்துப் பின்னணியில் அமைந்ததாக இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு சென்னையிலும், நடிகர்கள் தேர்வு மதுரை, சிவகங்கை வட்டாரங்களிலும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்படத்தை கனா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது இவ்வாறு இயக்குநர் விக்கி கூறினார்.

More News

வெள்ளக்காடான வட இந்தியா? கவிதை வடித்து வருத்தம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட இந்தியா முழுக்கவே பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

'பிக்பாஸ் சீசன் 7' தொடங்குவது இந்த தேதியிலா? 3 மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இதுவரை 6 சீசன் முடிவடைந்துள்ளன என்பதும் 6 சீசன்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'காவாலா' பாட்டுல ரஜினியே கிடையாதா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த 'ஜெயிலர்' பிரபலம்..!

 'காவாலா' படத்தில் தமன்னாவுக்கு மட்டும் பாட்டு எழுத வேண்டும் என்று என்னிடம் இயக்குனர் கூறியதாகவும் ரஜினி இந்த பாடலில் இருப்பதையே தன்னிடம் கூறவில்லை என்றும் இந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ்

ஒரே படத்தில் இணைகிறார்களா கமல் - அஜித் - சூர்யா..? கெளதம் மேனன் யுனிவர்சல் படம்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வேட்டையாடு விளையாடு' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது சமீபத்தில் கூட இந்த படம் மீண்டும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை

இது புது டிரெண்டா? நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட் புகைப்படம் வெளியிட்ட நடிகை லட்சுமி ராய்!

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிகாக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்த நடிகையான லட்சுமி ராய் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் நிலையில்