ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த வித்தியாசமான ட்ரீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியதற்காக திருச்சி அருகே ராஜா-உஷா தம்பதியை விரட்டி சென்ற காவல்துறை அதிகாரி ஒருவர் எட்டி உதைத்ததால் உஷா என்ற ஒரு உயிர் பலியாகிய சம்பவம் காவல்துறையை மட்டுமின்றி தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து காவல்துறையே மோசமானது என்ற விமர்சனங்களும் எழுந்தது.
ஆனால் அது பொய் என்பது நேற்று மயிலாப்பூரில் முதியவர் ஒருவருக்கு புதிய லுங்கி வாங்கி கொடுத்து அரவணைத்தவரும் ஒரு காவல்துறை அதிகாரிதான் என்பது அனைவரும் தெரிந்ததே
இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, இனிமேல் ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கி அசத்தியுள்ளார் ஒரு காவல்துறை அதிகாரி. அவர்டான் நாகர்கோவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள் ஜான் ஒய்சிலிராஜ்.
இன்று காலை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே பணியில் இருந்த அருள்ஜான் ஒய்சிலிராஜ், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களை தனியாக அழைத்து அங்கு தயாராக போட்டு வைத்திருந்த நாற்காலியில் உட்கார வைத்து ஹெல்மெட்டின் அவசியத்தையும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்களையும், விரிவாக விளக்கி விட்டு பின்னர் அவர்களை புன்சிரிப்புடன் வழியனுப்பி வைத்தார். ஹெல்மெட் போடாதவர்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மத்தியில் இப்படி ஒரு சமூக பொறுப்புடன் உள்ள அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments