மதுரைக்கு சிம்பு, காஞ்சிக்கு டி.ஆர்

  • IndiaGlitz, [Tuesday,August 23 2016]

தமிழக பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளவுள்ள எட்டு அணிகளின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் சிம்பு, மதுரை சூப்பர் ஜெயண்ட் அணிக்காக புரமோஷன் செய்ததோடு, 'ஆட்டைக்கு ரெடியா' என்ற பாடலையும் பாடி கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.,
இந்நிலையில் தற்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் 'ரூபி காஞ்சி வாரியர்' அணிக்காக ஒரு பாடலை பாடவுள்ளார். தரண்குமார் கம்போஸ் செய்துள்ள மெட்டுக்கு டி.ஆர். தனது வழக்கமான ஸ்டைலில் பாடிய இந்த பாடல் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
ஏற்கனவே 'நாய்கள் ஜாக்கிரதை' உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ள தரண்குமார், 'மணல் கயிறு 2, 'மாகாப நடிக்கும் படம் ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.