டி.ராஜேந்தரின் அடுக்கு மொழி பேச்சால் சீறிய 'புலி' இசை விழா
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆக இருந்தாலும், அனைவரையும் தனது வழக்கமான எதுகை மோனை பேச்சினால் அசத்தியவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாள் வெளிவராமல் பல பிரச்சனைகளில் சிக்கிய சிம்புவின் 'வாலு' படம், விஜய் தலையிட்டதும் ஒருசில மணி நேரங்களில் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இந்த நன்றிக்கடன் டி.ராஜேந்தருக்கு இருந்தாலும், அவருடைய பேச்சில் ஒரு நிஜமான பாசம் இருந்ததை பார்க்க முடிந்தது. அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், அவரது அடிமனதில் இருந்து எழுந்து வந்ததாகவே பார்வையாளர்கள் கருதினர். மொத்தத்தில் தனது நெகிழ்வான பேச்சினால் இந்த விழாவின் நாயகனாகவே டி.ராஜேந்தர் மாறிவிட்டார் என்பதுதான் உண்மை.
டி.ராஜேந்தர் பேசியதன் சில பகுதிகளை இப்போது பார்ப்போம்:
சிம்பு மற்றொரு நடிகருக்கு ரசிகர். ஆனால், அவருடைய நண்பர் விஜய். விஜய் உதவி செய்தார் என்றால் இருவருமே அண்ணன் - தம்பிகள், தமிழர்கள். பெரிய நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் நான் பெரும்பாலும் பங்கேற்பதில்லை. ஆனால் விஜய் நல்ல மனதுக்காக இவ்விழாவில் பங்கேற்று இருக்கிறேன்"
விஜய் ஒரு நல்ல உள்ளம் கொண்டவர். இது ஒவ்வொரு உண்மையான தமிழனித்திலும் இருக்கும் இயல்பான குணம். என்னுடைய மகன் சிம்புவை தனது சகோதரனாக நினைத்து அவனுடைய படம் வெளிவர உதவி செய்துள்ளார். அவரது உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.
தம்பி விஜய் உன்னிடம் இல்லை தலைக்கணம். நீ பேசமாட்ட வசனங்கள் கத்தி, நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி
மேலும் டி.ராஜேந்தர் பேசியபோது, "இது சிறப்பான புலி, இது சிவப்பான புலி, இது செம்புலி, இது சீறும் புலி, இது அரும் புலி, இது பெரும்புலி, இது தமிழ் இன புலி, இது வெற்றி புலி, இது வேட்டை புலி, இது கலைப் புலி, களங்கமில்லா புலி என புலியில் முடியும் பல வார்த்தைகளை அடுக்கு மொழியில் பேசினார். அவர் ஒவ்வொரு புலியின் பெயரையும் சொல்லும்போது அரங்கமே அதிர்ந்தது.
டி.ராஜேந்தரின் அடுக்கு மொழி பேச்சை கேட்டு சந்தோஷத்தில் மூழ்கிய விஜய், ஒரு கட்டத்தில் எழுந்து மேடைக்கு சென்று டி.ராஜேந்தரை கட்டிப்பிடித்து அவருக்கு பொன்னாடை போர்த்தினார். டி.ராஜேந்தர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விஜய்யை கட்டிப்பிடித்து கொண்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சியை பார்த்த விழாக்குழுவினர் உள்பட அனைவரும் உணர்ச்சி வசப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout