விஜய்யின் 'தெறி'யில் இணைந்தார் டி.ஆர்

  • IndiaGlitz, [Friday,March 04 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டுவிழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக வெளிவந்த அதிகாரபூர்வ செய்தியினை நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பாடல் வெளியீடு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் புதிய பாடல் ஒன்றை இணைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பாடலை டி.ராஜேந்தர் பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


டி.ராஜேந்தர் பாடிய இந்த பாடல் ஒரு அட்டகாசமான குத்துப்பாடல் என்றும், இந்த பாடல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரிகார்டிங் ஸ்டுடியோவில் சுமார் 3 மணி நேரத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் மிக அருமையாக வந்துள்ளதாக டி.ஆர். தனது மகிழ்ச்சியினையும் தெரிவித்துள்ளார். இந்த பாடல் விஜய்க்காக டி.ஆர்.பாடினாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பெரும்பொருட்செலவில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.