கவுண்டமணி காமெடியில் குத்து பாட்டு பாடிய டி.ராஜேந்தர்

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

சகலகலாவல்லர் டி.ராஜேந்தர் அவ்வப்போது பாடல்கள் பாடி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நாகேந்திரபிரசாத நெகட்டிவ் ஹீரோவாக நடித்து வரும் 'கூத்தன்' என்ற படத்திற்காக சமீபத்தில் ஒரு குத்து பாடலை அவர் பாடியுள்ளார்.

காமெடி நடிகர் கவுண்டமணியின் புகழ்பெற்ற காமெடி வசனங்களில் ஒன்றான 'மங்கிஸ்தா கிங்கிஸ்தா' என்று தொடங்கும் இந்த பாடலை 'டங்கமாரி' புகழ் ரோகெஷ் எழுதியுள்ளார். இந்த பாடலை டி.ராஜேந்தருடன் இணைந்து சூப்பர் சிங்கர் பங்கேற்பாளர்களான செண்பகராஜ் மற்றும் சாஜினி பாடியுள்ளனர்.

இந்த பாடலின் ஒருசில வரிகளை பாடியபோது டி.ராஜேந்தர் உணர்ச்சிவசப்பட்டதாகவும், இந்த வரிகள் தன்னை கண்கலங்க செய்துவிட்டதாக டி.ராஜேந்தரே கூறியதாகவும் இசையமைப்பாளர் பால்ஸ் கூறியுள்ளார். 

இதே படத்தில் நடிகை ரம்யா நம்பீசனும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தேசியகீதம் குறித்து நடிகை கவுதமியின் கருத்து

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்புவது கட்டாயம் என்பது தேவையா? தேசிய கீதம் ஒளிபரப்பும்போது எழுந்து நிற்க வேண்டியது அவசியமா? என்று நீதிமன்றம் முதல் பல இடங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

சிங்கப்பூரை போல இந்தியாவிலும் பின்பற்றலாம்: கமல்ஹாசன்

ஒவ்வொரு நாளும் நள்ளிரவு நேரத்தில் சிங்கப்பூரில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. நமது நாட்டின் டிடி தொலைக்காட்சியிலும் அதேபோல் செய்யலாம்.

நடிகை அசினுக்கு கிடைத்த பெருமைக்குரிய புரமோஷன்

அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை அசின் திருமணத்திற்கு பின் நடிப்புலகில் இருந்து விலகி இல்லற வாழ்க்கையில் மட்டும் ஈடுபட்ட அசினுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

வேலைக்காரன்' படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'கருத்தவனெல்லாம் கஜிலாம்'

விஜய் அந்த இடத்தை நிச்சயம் பிடிப்பார்: கோவை சரளா

தளபதி விஜய் நடித்த 'மெர்சல் திரைப்படம் தமிழக அரசியலை ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் சிறு வேடமாக இருந்தாலும் சிறப்பான வேடத்தில் நடித்தவர் கோவை சரளா.