தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்து வரும் நிலையில் தற்போதைய நிர்வாகிகளான கலைப்புலி எஸ்.தாணு , டி.சிவா, ராதாகிருஷ்ணன், கதிரேசன், தேனப்பன் ஆகியோர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதில் ஒரு அணியில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன் துணைத்தலைவர் பதவிக்கும், கேயார், கதிரேசன் செயலாளர் பதவிக்கும், போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது அணியில் டி.சிவா, தனஞ்செயன் ஆகியோர்களும், மூன்றாவது அணியில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், தேவயானி ஆகியோர்களும் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.
இந்த தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் வரும் 8 முதல் 12ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 13ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளதூ. ஜனவரி 18ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments