'சிம்பு படத்துக்கு எதிராக சதி செய்வோர் திரையுலகைச் சேர்ந்தவர்களே' டி.ஆர். குற்றச்சாட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிலம்பரசன் நடித்து நீண்ட தாமதத்துக்குப் பின் ஜூலை 17 அன்றூ வெளியாவதாக அறிவ்க்கப்பட்ட வாலு` படத்துக்கு நேற்று வெளியான நீதிமன்ற உத்தரவால் திடீர் தடை ஏற்பட்டது. இதை அடுத்து அந்தப் படத்தை வாங்கி வெளியிடுபவரும் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் இன்று ஊடகத்தினரை சந்தித்தார்.
“வாலு பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் இடைக்கால் தடை விதித்திருப்பதாக ஊடகங்கள் தவறாக எழுதுகின்றன. படத்தின் வெளியீடு தொடர்பான எந்த பணிகளையும் தற்போதைகு தொடரக் கூடாது என்பதற்கான `ஸ்டேட்டஸ் கோ` உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது...வாலு படம் ஜூலை 17 அன்று வெளியாகும் என்று ஜூன் 19 முதல் பத்திரிகைகளில்
விளம்பரப்படுத்திவருகிறோம். இத்தனை நாட்கள் விட்டுவிட்டு வெளியீட்டுக்கு சில நாட்களே இருக்கையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தியிடம் படத்தின் விநியோக உரிமைக்கு எந்தெந்த பகுதிக்கு யாரிடமெல்லாம் பணம் பெறப்பட்டது என்பதைக் கேட்டறிந்து ஒவ்வொருவராக செட்டில்மெண்ட் செய்துவருகிறேன். இப்போது வழக்கு தொடர்ந்திருப்பவரிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி திருப்பிகொடுக்கப்பட்டுவிட்டது. மீதிப் பணம் தொடர்பாக வேட்டை மன்னன்` பட வெளியீட்டின் போது பேசிக்கொள்ளலாம் என்று கூறி அதற்கு அவரது ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அந்த நபர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதை யார் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தங்கள் படமும் தங்களுக்கு ஆதரவானவர்களின் படமும்தான் வெளியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சிம்பு படம் வெளியாகக் கூடாது என்பதற்காக இதுபோன்ற வேலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் யார் என்பதை நேரம் வரும்போது சொல்வேன். வாலு படத்தை வெளியிட நான் இதுவரை 300 திரையரங்குகளை புக் செய்து வைத்திருந்தேன். இப்போது இந்தப் பிரச்சனையால் அந்தத் திரையரங்க உரிமையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். திங்கட்கிழமை (ஜூலை 13) அன்று நீதிமன்றத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. நீதிபதி என்ன தீர்ப்பு கூறுகிறாரோ அதை ஏற்று நடப்பேன்” என்றார்.
இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம் வெற்றிபெறுமா என்ற கேள்விக்கு “டேட்டு முக்கியமில்ல. சிம்புவின் ஃபேட்.(விதி) தான் முக்கியம்” என்று தன் முத்திரை பாணியில் பதிலளித்தார்.
மேலும் ”சிலம்பரசன் நாயகனாக நடித்த படம் வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் மீதான் அன்பைக் குறைக்காமல் `வாலு` படத்தை எதிர்பார்த்து மிகப் பெரிய அளவில் ஆதரித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி” என்றும் கூறினார் பன்முகக் கலைஞர் டி.ஆர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments