'சிம்பு படத்துக்கு எதிராக சதி செய்வோர் திரையுலகைச் சேர்ந்தவர்களே' டி.ஆர். குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Thursday,July 09 2015]

நடிகர் சிலம்பரசன் நடித்து நீண்ட தாமதத்துக்குப் பின் ஜூலை 17 அன்றூ வெளியாவதாக அறிவ்க்கப்பட்ட வாலு' படத்துக்கு நேற்று வெளியான நீதிமன்ற உத்தரவால் திடீர் தடை ஏற்பட்டது. இதை அடுத்து அந்தப் படத்தை வாங்கி வெளியிடுபவரும் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் இன்று ஊடகத்தினரை சந்தித்தார்.

“வாலு பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் இடைக்கால் தடை விதித்திருப்பதாக ஊடகங்கள் தவறாக எழுதுகின்றன. படத்தின் வெளியீடு தொடர்பான எந்த பணிகளையும் தற்போதைகு தொடரக் கூடாது என்பதற்கான 'ஸ்டேட்டஸ் கோ' உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது...வாலு படம் ஜூலை 17 அன்று வெளியாகும் என்று ஜூன் 19 முதல் பத்திரிகைகளில்

விளம்பரப்படுத்திவருகிறோம். இத்தனை நாட்கள் விட்டுவிட்டு வெளியீட்டுக்கு சில நாட்களே இருக்கையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தியிடம் படத்தின் விநியோக உரிமைக்கு எந்தெந்த பகுதிக்கு யாரிடமெல்லாம் பணம் பெறப்பட்டது என்பதைக் கேட்டறிந்து ஒவ்வொருவராக செட்டில்மெண்ட் செய்துவருகிறேன். இப்போது வழக்கு தொடர்ந்திருப்பவரிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி திருப்பிகொடுக்கப்பட்டுவிட்டது. மீதிப் பணம் தொடர்பாக வேட்டை மன்னன்' பட வெளியீட்டின் போது பேசிக்கொள்ளலாம் என்று கூறி அதற்கு அவரது ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அந்த நபர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதை யார் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தங்கள் படமும் தங்களுக்கு ஆதரவானவர்களின் படமும்தான் வெளியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சிம்பு படம் வெளியாகக் கூடாது என்பதற்காக இதுபோன்ற வேலைகளைச் செய்கிறார்கள். அவர்கள் யார் என்பதை நேரம் வரும்போது சொல்வேன். வாலு படத்தை வெளியிட நான் இதுவரை 300 திரையரங்குகளை புக் செய்து வைத்திருந்தேன். இப்போது இந்தப் பிரச்சனையால் அந்தத் திரையரங்க உரிமையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். திங்கட்கிழமை (ஜூலை 13) அன்று நீதிமன்றத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. நீதிபதி என்ன தீர்ப்பு கூறுகிறாரோ அதை ஏற்று நடப்பேன்” என்றார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம் வெற்றிபெறுமா என்ற கேள்விக்கு “டேட்டு முக்கியமில்ல. சிம்புவின் ஃபேட்.(விதி) தான் முக்கியம்” என்று தன் முத்திரை பாணியில் பதிலளித்தார்.

மேலும் ”சிலம்பரசன் நாயகனாக நடித்த படம் வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் மீதான் அன்பைக் குறைக்காமல் 'வாலு' படத்தை எதிர்பார்த்து மிகப் பெரிய அளவில் ஆதரித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி” என்றும் கூறினார் பன்முகக் கலைஞர் டி.ஆர்.

More News

'சைஸ் ஜீரோ'வில் ஆர்யா-அனுஷ்காவின் லிப் லாக்?

அனுஷ்கா நடித்த பாகுபலி, ருத்ரம்மாதேவி என அடுத்தடுத்து இரண்டு பிரமாண்டமான மற்றும் அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வெளியாகவுள்ள நிலையில் அனுஷ்காவின் ஹாட் ரொமான்ஸ் படம் ஒன்று விறுவிறுப்பாக தயாராகி வருகிறது......

நாளை முதல் வெளியாகும் ஆர்யாவின் குவார்ட்டர் டீஸர்

'பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றி படத்தை அடுத்த இயக்குனர் எம்.ராஜேஷ்-ஆர்யா இணைந்த அடுத்த படமான 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதை ஏற்கனவே பார்த்தோம்......

கமலுடன் நடித்தால்தான் ஒரு நடிகர் முழுமை அடைவார். ஆனந்த் மகாதேவன்

கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள 'பாபநாசம்' திரைப்படத்தில் கமல், கவுதமி, ஆஷா சரத் ஆகியோர்களுக்கு அடுத்து முக்கிய வேடத்தில் நடித்தவர் ஆனந்த் மகாதேவன்......

ரஜினி, அஜித் இருவரையும் முந்திய விஜய்

இப்போதெல்லாம் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் டீசரை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை வைத்தே அளக்கப்படுகிறது...

பார்த்திபனுடன் இணைவாரா 'நேரம்' நிவின்பாலி?

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பிரபல மலையாள மலையாள நடிகர் நிவின்பாலி, மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்...