பீப் பாடலால் ஏற்பட்ட களங்கத்தை கண்ணீரால் துடைக்கின்றேன். டி.ஆர்

  • IndiaGlitz, [Monday,December 21 2015]

பீப் பாடல் குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று சிம்பு அளித்த ஒரு பேட்டியில் இந்த பாடலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்பதாகவும், இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பீப் பாடல் குறித்து சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தப் பாடல் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றது அல்ல. இது தனிப்பட்ட முறையில் ஆல்பமாக வெளியான பாடலும் அல்ல. அதேசமயத்தில் முழுமையான வடிவம் பெற்ற பாடலும் அல்ல.

இந்தப் பாடலில் சம்பந்தப்பட்ட சிம்பு, தொலைக்காட்சியிலோ, எப்.எம்.ரேடியோவிலோ, ஒரு அரங்கத்திலோ, மேடைக் கச்சேரியிலோ, தெருவோரத்திலோ நின்று இதை பாடவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பாடல் முறைப்படியாக ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்யப்படவில்லை. இது, ஒரு முழுமை பெறாத பாடல்.

அதாவது தனிப்பட்ட முறையில் ஒரு அறையில் சில டம்மி வார்த்தைகளை போட்டு பாடிவிட்டு, அதைக்கூட வேண்டாம் என்று தொழில்நுட்ப முறையிலே பீப் போட்டு மூடி வைத்துவிட்டு, ஒருகட்டத்தில் அந்தப் பாடல் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டு ஓரு மூலையில் தூக்கி எறியப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட பாடல்.

அந்த பாடலை வேண்டுமென்றே, வேண்டத்தகாத விஷக்கிருமிகள் சிலர் திருடி எடுத்துச் சென்று, சிம்புவின் மேல் பெண்கள் மத்தியில் ஒரு கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும், ஒரு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற சதித்திட்டத்துடன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

எனக்கென்று ஒரு பெயரை தமிழ் சமுதாயத்தில் நான் பெற்று வைத்திருக்கிறேன். யாரோ திருடிச் சென்று வெளியிட்டுவிட்ட இந்தப் பாடல் விவகாரத்தில் என்னுடைய மகன் சிம்புவின் பெயர் மறைமுகமாக அடிபடுகிறது.

என்னுடைய தமிழ் சமுதாய மக்கள், மூத்த தாய்மார்கள் மனதில் இந்தப் பாடல் நெருடலை ஏற்படுத்துகிறது என்று சொன்னால், நான் அதற்காக வருத்தப்படுகிறேன். மனது உருகுகிறேன். என்னுடைய கண்ணீரால் அந்த களங்கத்தை உங்கள் மனதில் இருந்து துடைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் பேசியுள்ளார்

More News

அஜித் ரசிகர்கள் தரும் மரியாதை- ஷாம்லி பெருமிதம்

அஜித் மனைவி ஷாலினிஅஜித்தின் சகோதரி ஷாம்லி தற்போது தனுஷ் நடிக்கும் கொடி படத்திலும், விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...

பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக்குரல் எழும்பியபோதிலும், நடிகர் சங்கம் இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என சரத்குமார் உள்பட பலர் கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று நடிகர் சங்கம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளத

'தெறி' கிளைமாக்ஸில் அட்லியை அசத்திய விஜய்

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தெறி' படத்தின் கோவா படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது....

பாஜிராவ் மஸ்தானி'. திரைவிமர்சனம்

சரித்திர படங்களின் மீது அனைவருக்கும் ஒரு ஆர்வம் வர காரணமாக இருந்த படம் 'பாகுபலி'. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ரசிகர்களுக்கு சரித்திர படங்கள் மீது ஒரு மரியாதை தோன்றிய நிலையில் வந்துள்ள படம்தான் 'பாஜிராவ் மஸ்தானி....

பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் கருத்து தெரிவிக்காதது ஏன்? சரத்குமார்

அனிருத் இசையமைத்ததாகவும், சிம்பு பாடியதாகவும் கூறப்படும் பீப் பாடலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வரும் நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்....