டி.ஆர் பாலு, கனிமொழி, ஆ.ராசாவுக்கு புதிய பதவி: விரிவான தகவல்

  • IndiaGlitz, [Saturday,May 25 2019]

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. திமுக மட்டுமே 23 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை திமுக குழுத் தலைவராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டார். மக்களவைக்கு 6 முறையும் மாநிலங்களவைக்கு ஒருமுறையும் தேர்வு செய்யப்பட்ட டி.ஆர்.பாலு, இம்முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

மேலும் மக்களவை திமுக குழு துணைத்தலைவராக கனிமொழியும், திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

More News

இனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி!

மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் இந்த மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

டவுட்டே வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்

'கனா' திரைப்படத்தின் வெற்றி, விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை குறிப்பாக பெண்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இயக்க பலர் முன்வந்துள்ளனர்.

ஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா? கன்னியாகுமரி எம்பி அதிர்ச்சி

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தியவர் எச்.வசந்தகுமார்.

சூர்யாவின் என்.ஜி.கே: தமிழ் சினிமாவில் செய்த முதல் சாதனை

100 வருட தமிழ் சினிமாவில் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது. 

ஓ இதுதான் தமிழ் மண்ணா? பாஜக வெறுப்பாளர்களை வெறுப்பேற்றிய எஸ்.வி.சேகர்

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், கேரளம் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது.