ஐபிஎல் வடிவில் டிக்கெட் வெளியிட்ட வேல்முருகன் கட்சியினர்
- IndiaGlitz, [Thursday,April 26 2018]
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று போராடிய கட்சிகளில் ஒன்று வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி. இந்த போராட்டம் காரணமாக சென்னையில் ஒரே ஒரு போட்டி மட்டும் நடந்த நிலையில் மற்ற போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் ஏப்ரல் 29ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மெரீனாவில் தடையை மீறி போராட்டம் நடத்த போவதாக தமிழர் வாழ்வுரிமை கட்சி அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் அழைப்பிதழ் தற்போது வெளிவந்துள்ளது. இந்த அழைப்பிதழை ஐபிஎல் டிக்கெட் வடிவில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வடிவமைத்துள்ளனர். தமிழ் பீப்பிள் லீக் என்பதை TPL என்று பெயரிட்டு இந்த அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியை நிறுத்த காரணமாக இருந்த கட்சிகளில் ஒன்றே, ஐபிஎல் போட்டி டிக்கெட் வடிவில் போராட்டத்தின் அழைப்பிதழை அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.