இன்று ஒரே நாளில் மூவர் பலி: இந்தியாவில் கொரோனாவால் அதிகரிக்கும் மரணங்கள்

  • IndiaGlitz, [Sunday,March 22 2020]

கொரோனா வைரசால் இந்தியாவில் நேற்று வரை நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இன்று ஒரே நாளில் ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் இறந்தவரின் வயது வெறும் 38 என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே முதல் முறையாக இளைஞர் ஒருவர் இந்தியாவில் கொரோனாவால் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் வந்த செய்தியின்படி, குஜராத் மாநிலத்தில் முதன் முதலாக ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளார். 69 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சற்று முன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமன்றி இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ்க்கு மூன்று பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மார்ச் 31ஆம் தேதி வரை பிறப்பிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

More News

மக்கள் சுய ஊரடங்கு நாளை காலை வரை நீடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுயஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில்

மாலை 5 மணிக்கு “அன்பின் ஒலி“ எழுப்புங்கள்; தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வீடியோ!!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, (மார்ச் 22) இன்று ஒருநாள் மட்டும் 14 மணிநேரம் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பி

கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம்!!!

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா 3 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

சீனா இத்தாலி போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிற்குள்ளும் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர்களை பலி வாங்கி வருகிறது.

தனிமை அறையில் மணிரத்னம் மகன்: வைரலாகும் வீடியோ

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கொரோனா வைரஸ் தாக்கி இருந்தாலும் தாக்காவிட்டாலும் ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுரை