கொரோனா update.. இந்தியாவில் இன்று வரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா..?!
- IndiaGlitz, [Thursday,March 12 2020]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருகிறது.உலக அரசுகளும் கட்டுப்படுத்த பல முயற்சியாகில் எடுத்து வருகின்றன. மக்கள் அச்சப்படத் தேவையில்லை, முன்னெச்சரிக்கையாக இருந்தாலே போதும் என கூறப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 1,26,502 ஆகும்.
இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் இருக்கிறது. முதலில் 5 பேருக்கு மட்டுமே கோரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டது. அடுத்த நாளே அந்த எண்ணிக்கை 29 ஆனது. அதன்பிறகு 40.. இன்று 73ல் வந்து நிற்கிறது. மாநிலங்கள் வாரியாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த புள்ளிவிவரத்தின் படி கேரளாவில் அதிகமாக 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து ஹரியானா 14 பேர் ஆனால் இவர்கள் வெளிநாட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தடுத்த இடங்களில் உத்திரப்பிரதேசமும் (10 பேர்) டெல்லியும் (6 பேர்) இருக்கிறது. தமிழ்நாட்டிலும் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி, சிகிச்சைப் பெற்று வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.