அதிக உணவு உண்பதை கன்ரோல் செய்யலாம் .....! உடல் எடையை குறைக்க வந்தாச்சு புதிய டிவைஸ்...!

  • IndiaGlitz, [Thursday,July 01 2021]

நம்மில் சிலர் அதிகம் உணவு உண்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள், இதனால் உடல் எடை கூடும் அபாயமும் உள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய டிவைஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் நியூஸிலாந்தினர்.

நியூசிலாந்தில், ஓட்டாக என்ற பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் தான் டார்ச்சர் டிவைஸ் எனும் கருவியை கண்டுபிடித்துள்ளார்கள். நமது உடல் எடையைக் குறைக்கும் பட்சத்தில், காந்த ஈர்ப்பு சக்தியுடைய இந்தக்கருவியை பற்களின் இடையே பொருத்திக் கொள்ளலலாம். இதை பொருத்தியபின்பு நம் வாயை 6 மி.மீ. அளவில் மட்டுமே நம்மால் திறக்க முடியும் என்பதால், திட வகை உணவுப்பொருட்களை நம்மால் சாப்பிட முடியாது. திரவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். இதன் மூலமாக கணிசமாக உடல்எடை குறையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த டிவைஸ்-ஐ பொருத்திய பின்பு வாயைதிறக்க முடியாது. ஆனால் பேசவோ, சுவாசிக்கவோ எந்த பிரச்சனையும் இருக்காது. இக்கருவியை சிலருக்கு பொருத்திப்பார்த்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள், சிலருக்கு 2 வாரங்களில், சுமார் 3.36 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். சரியான எடை அளவு குறைந்ததும், சாதாரண சிகிச்சை முறைக்கு நாம் திரும்பிவிட வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.