அஜித் படத்தை இழந்த விக்னேஷ் சிவனுக்கு கை கொடுத்த டாப் 3 ஹீரோக்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,February 22 2023]

அஜித் நடிக்க இருந்த ’ஏகே 62’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி விட்டதாகவும் இதனை அடுத்து ’ஏகே 62’ திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்த விக்னேஷ் சிவனின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் ’நானும் ரவுடிதான்’ ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படங்களை அடுத்து மீண்டும் இருவரும் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ’லவ் டுடே ’நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க மட்டும் செய்வாரா அல்லது சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

’ஏகே 62’ படத்தின் வாய்ப்பை இழந்த விக்னேஷ் சிவனுக்கு கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பிரதீப் ரங்கநாதன் ஆகிய மூவரும் கைகொடுத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.