2017ஆம் ஆண்டின் டாப் 10 டீசர்: முதல் இரண்டு இடத்தை பிடித்த தளபதி-தல

  • IndiaGlitz, [Thursday,December 28 2017]

2017ஆம் ஆண்டு சினிமா துறைக்கு கலவையான ஆண்டு என்றே கூற வேண்டும். ஜிஎஸ்டி, ஆன்லைன் பைரசி, தமிழக அரசின் கூடுதல் வரி ஆகிய பிரச்சனைகள் இருந்தாலும் 'அருவி' போன்ற பல சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்று புதியவர்களுக்கு தெம்பு கொடுத்த ஆண்டாக இந்த ஆண்டு இருந்தது. இருப்பினும் இந்த ஆண்டின் டாப் 10 டீசர் பட்டியலில் பெரும்பாலும் பெரிய நட்சத்திரங்கள் படங்களே உள்ளன. குறிப்பாக டாப் 10 டீசர் பட்டியலில் முதல் இடத்தை தளபதி விஜய்யின் 'மெர்சல்' படமும், இரண்டாவது இடத்தில் தல அஜித்தின்  விவேகம்' படமும் பெற்றுள்ளது.

யூடியூபில் அதிக ரசிகர்கள் பார்த்த டாப் 10 டீசர்கள் பட்டியல் இதோ:

1. விஜய்யின் மெர்சல்: 36,215,122

2. அஜித்தின் விவேகம்: 22,607,460

3. விக்ரமின் துருவ நட்சத்திரம்: 15,132,952

4. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்: 9,017,530

5. விக்ரமின் ஸ்கெட்ச்

6. சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்: 6,201,397

7. ஜோதிகாவின் 'நாச்சியார்': 5,197,991

8. தனுஷின் விஐபி 2: 4,873,281

9. ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்: 4,430,134

10. கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று: 3,910,611

2017ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் படங்களின் டீசர் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் வரும் ஆண்டு ரஜினியின் '2.0' மற்றும் 'காலா' படங்களின் டீசரும், கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' மற்றும் 'சபாஷ் நாயுடு, 'இந்தியன் 2' ஆகிய படங்களின் டீசர்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த ஆண்டின் டாப் 10 டீசர் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.