ஒரு பெரிய ஹீரோவின் தந்தை போன்றவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்! யாஷிகா ஆனந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
மீடூவில் பாலியல் குற்றச்சாட்டு கூறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவரும் நிலையில் சமீபத்தில் நடிகை யாஷிகா தனக்கும் பாலியல் தொல்லைகள் நடந்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிரபல இயக்குனரும், ஒரு பெரிய ஹீரோவின் தந்தை போன்ரவருமான ஒருவர் என்னை படுக்கைக்கு வருமாறு அழைத்ததாக கூறினார். அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும், அவர் என்னிடம் இதனை நேரடியாக கேட்காமல், என்னுடைய தாயாரிடம் கேட்டதால் இந்த விஷயம் குறித்து நான் புகார் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் இதுமாதிரி காம்ப்ரமைஸ் செய்து ஒரு துறையில் முன்னேற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறிய யாஷிகா, பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அனுபவங்களை தைரியமாக வெளியே கூற முன்வரவேண்டும் என்றும் என்னுடைய ஆதரவு எப்போதும் மீடூவுக்கு உண்டு என்றும் கூறினார். யாஷிகா கூறிய அந்த பெரிய ஹீரோவின் தந்தை போன்றவர் யார்? என்பது குறித்து நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments