அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்: விஜய், அஜித் படங்கள் இல்லையா?

  • IndiaGlitz, [Monday,October 10 2022]

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த ஐந்து தமிழ் திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் விஜய், அஜித் படங்கள் ஒன்று கூட இல்லை என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’2.0’ என்ற படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் $5,509,317 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த வசூலை சமீபத்தில் வெளியான மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முறியடித்துள்ளது. இந்த படம் இதுவரை $5.54 மில்லியன் வசூல் செய்துள்ளது என்றும் இன்னும் அதிக வசூல் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த 5 திரைப்படங்கள் பட்டியலை தற்போது பார்ப்போம்.

1. 'பொன்னியின் செல்வன்: $5.54 M (2022)

2. ’2.0’: $5,509,317 (2018)

3. ’கபாலி’: $4,585,808 (2016)

4. ’விக்ரம்’: $2,858,359 (2022)

5. ’பேட்ட’: $2,553,065 (2019)

இந்த பட்டியலில் ரஜினிகாந்தின் மூன்று படங்கள் மற்றும் கமல்ஹாசனின் ஒரு படம் உள்ளன என்பதும் இந்த பட்டியலில் அஜித். விஜய் படங்கள் இல்லாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.