சன் டிவியில் 'டாப் குக்கு டூப் குக்கு' ஒளிபரப்பாகும் தேதி.. 'குக் வித் கோமாளி'யை மிஞ்சுமா?

  • IndiaGlitz, [Sunday,May 12 2024]

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் நடந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும், இந்த சீசனில் வெங்கடேஷ் பட் இல்லை என்றாலும் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர் என்பதும் குக்குகளும் கோமாளிகளும் ஒவ்வொரு எபிசோடுகளில் கலக்கி வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் வெங்கடேஷ் பட் நடத்தும் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த நிகழ்ச்சியின் விளம்பரங்கள் அவ்வப்போது சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி இந்த நிகழ்ச்சி மே 19ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி ஞாயிறு மட்டும் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

மொத்தத்தில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு போட்டியாக சமையல் மற்றும் காமெடியுடன் ஒளிபரப்பாகும் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இன்று மட்டுமல்ல, எந்நாளும் போற்றி வணங்குவோம்: தவெக தலைவர் விஜய்யின் பதிவு..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அன்னையர் தின வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் வீட்டில் இன்னொரு மணமகள் ரெடி.. வைரலாகும் அதிதி ஷங்கர் போட்டோஷூட்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும்,

விஜய்யின் 'கோட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் 4 பிரபலங்கள்.. இவர் நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம்

இனிமேல் சென்னை வேண்டாம்.. 'கோட்' இசை வெளியீட்டு விழா இடத்தை தேர்வு செய்த விஜய்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது விஜய், வெங்கட் பிரபு உள்பட படக்குழுவினர்

யாஷ் நடிக்கும் படத்தில் இணையும் 'வலிமை' நடிகை.. நயன்தாரா உண்டா? இல்லையா?

'கேஜிஎஃப்' நடிகர் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அஜித்தின் 'வலிமை' படத்தில் நடித்த நடிகை இணைய