'தளபதி 69' படத்தில் 'டாப் குக்கு டூப் குக்கு பிரபலம்.. கனவு நனவானதாக நெகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Saturday,October 05 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 69’ படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி மற்றும் ‘டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஒருவர் இணைந்து இருப்பதாக தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தளபதி விஜய் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 69’. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பாஜு, பிரியாமணி, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளீட்டோர் நடிக்க இருப்பதாக அறிவித்த நிலையில் இந்த படத்தில் மோனிஷா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ மற்றும் சன் டிவியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோனிஷா, தனது சமூக வலைத்தளத்தில் இதனை உறுதி செய்து விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார்.

மேலும் விஜய் அவர்களின் மிகப்பெரிய ரசிகையான தன்னுடைய கனவு நனவானது என்று கூறிய அவர் விஜய், வினோத் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்