ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 வீரர்கள்… எவ்வளவு தெரியுமா?
- IndiaGlitz, [Sunday,December 19 2021] Sports News
டி20 ஐபிஎல் கிரிக்கெட்டை ரசிகர்களைவிட கிரிக்கெட் வீரர்களும் அதிகம் விரும்புகின்றனர். அதற்குக் காரணம் ஐபிஎல் போட்டிகளில் விளையாட்டு வீரர்களுக்கு அதிகளவில் சம்பளம் கிடைக்கும் என்ற தகவல் பலருக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் தற்போது வரை ஐபிஎல் போட்டிகளில் அதிகச் சம்பளம் வாங்கிய டாப் 5 வீரர்களின் சம்பளப் பட்டியல் தற்போது வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
1.தோனி- ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுகிற ஒரு வீரர். சென்னை சிஎஸ்கே துவங்கியதில் இருந்தே தோனி இந்த அணிக்காக விளையாடி வருகிறார். இடையில் அணி விலக்கப்பட்டபோது 2 ஆண்டுகள் பூனே அணிக்காக விளையாடினார். அந்த வகையில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனிக்கு இதுவரை ஐபிஎல் போட்டிகளில் இருந்து சம்பளாக ரூ.152 கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது. தற்போதைய ஐபிஎல் போட்டிக்கு சிஎஸ்கே அணி இவரை ரூ.12 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2. இரண்டாவது இடத்தில் தற்போதைய இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். மும்பை அணிக்கு கேப்டனான இவர் இதுவரை 5 முறை இந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். அந்த வகையில் ரோஹித் சர்மா இதுவரை 146 கோடியே 60 லட்சம் ரூபாய் சம்பளாக பெற்றுள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது.
3. மூன்றாவது இடத்தில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். ஆர்சிபி பெங்களூரு அணிக்காக விளையாடி வரு இவர் இதுவரை 143 கோடியே 20 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் தற்பாதைய போட்டியில் ரூ.20 லட்சம் ரூபாய் கொடுத்து தக்கவைக்கப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த 2 ஆவது வீரர் ரெய்னா இந்தப் பட்டியலில் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் இவருக்கு ரூ.110 கோடியே 70 லட்சம் ரூபாய் சம்பள கொடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
5.டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே வெளிநாட்டு விளையாட்டு வீரர் ஏடி டேவில்லியர்ஸ். இவருக்கு இதுவரை ரூ.102 கோடியே 50 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.