பியூட்டி பிசினஸில் கால்தடம் பதித்த 5 பிரபல நடிகைகள்… யாரென்று தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம்வலம் சில முக்கிய நடிகைகள் சமீபகாலகமாக தோல் பராமரிப்பு, ஒப்பனைப் பொருட்கள், முடி பராமரிப்பு என்று அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி விற்பனை செய்யும் நிறுவனங்களில் தங்களது முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். அதுவும் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு இப்படி நடிகைகள் தங்களது சினிமா ஆர்வத்தைத் தாண்டி நிரந்தர முதலீட்டில் ஆர்வம் காட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஐந்து முக்கிய நடிகைகளின் அழகுசாதன முதலீடுகளைப் பற்றிய தொகுப்பு.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாரா ஏற்கனவே தனது கணவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதைத்தவிர ‘சாய்வாலா டீ‘ எனும் பிரபல உணவகத்துடன் ஒரு பங்குதாரராகவும் முதலீடு செய்துள்ள அவர் தனது தோழியும் காஸ்மெடாலஜிஸ்ட் மருத்துவருமான ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து லிப்பாம் நிறுவனம் ஒன்றை துவங்கி நடித்தி வருகிறார்.
‘தி லிப்பாம் கம்பெனி‘ எனும் பெயரில் உள்ள இந்த லிப்பாம் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நறுமண வகைகள் கிடைக்கின்றன என்பதும் தற்போது பிரபல நிறுவனங்களில் ஒன்றாக இது இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடைய பெயருக்கு ஏற்றமாதிரியே ஐ காஜல் நிறுவனம் ஒன்றை துவங்கியிருக்கிறார். ‘TAC பியூட்டி ஃபுல் ஐ காஜல்‘ என்ற அந்த நிறுவனம் தற்போது தனது விற்பனையை துவங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரியங்கா சோப்ரா
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகி தற்போது ஹாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்துவரும் நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்கனவே லாஜ் ஏஞ்சல்ஸ் நகரில் உணவகம் ஒன்றை துவங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அனோமலி எனும் ஹேர்கேர் பிராண்ட் நிறுவனம் ஒன்றையும் அவர் துவங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் குறித்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உயர்தர முடி பராமரிப்புப் பொருட்களை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எஸ்எல்இஎஸ் சல்பேட்டுகள், பாரபென்கள், பித்தலேட்டுகள், கனிம எண்ணெய் அல்லது வண்ணங்கள் எதுவும் இல்லாமல் சிறந்த கலவைகளை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் இந்த ஷாம்புகள் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத கேன்களில் அடைத்து விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இந்த அனோமலி ஹேர்கேர் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகை தீபிகா படுகோன்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்துவரும் நடிகை தீபிகா படுகோன் பிசியான நடிப்பிற்கு மத்தியில் கடந்த நவம்பர் மாதம் தோல் பராமரிப்பு பிராண்ட் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த தோல் பராமரிப்பு பொருட்கள் தற்போது 82E என்ற பெயரில் விற்பனை ஆகி வருகிறது.
அதில் அஸ்வகந்தா பவுன்ஸ் மாய்சரைசர் மற்றும் பட்சௌலி க்ளோ சன்ஸ்கிரீன் டிராப்ஸ் என இரண்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை கத்ரீனா கைஃப்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கத்ரீனா கைஃப் திருமணத்திற்கு பிறகு இந்தியாவிலேயே முன்னணி மேக்கப் பிராண்ட் நிறுவனமாக இயங்கி வரும் ‘கே’ பியூட்டி பொருள் நிறுவனத்தைத் துவங்கி நடத்தி வருகிறார். மேலும் இந்த நிறவனம் ரீடெய்லரான நைகாவுடன் இணைந்து நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments