பெரும்பேறு பெற்ற தமிழகம்… மறுக்கவும்… மறக்கவும் முடியாத முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  10 சாதனைகள்!!!

 

மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்குப் பின் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று விட்டன. இந்நிலையில் பல முரண்பாட்டு நிலைமைகளைத் தாண்டி எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களாலும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து தமிழக முதல்வராக ஏற்றம் பெற்றிருக்கிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததால் மக்களின் தேவை என்ன என்பதைக் குறித்து அறிந்து செயல்படும் முதல்வராக அரும்பணி ஆற்றி வருகிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டதில் இருந்து தற்போதுவரை தமிழகத்திற்கு பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அதில் எவராலும் செய்யமுடியாத 10 சாதனை பட்டியலை அக்கட்சி நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.

1.காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தது - காவிரி மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலப் பகுதியாக அறிவிக்கப் பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

2. குடிமராமத்து திட்டம்- நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல கோடி ரூபாய் செலவழித்து குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 90% ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு நீரை சேமிப்பதற்கு தகுதியான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளன.

3. கோவிட் -19 கையாளும் திறன்- கோவிட் 19 பேரிடர் காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்து பல திட்டங்களை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்தியாவிற்கே தமிழகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு இந்தியாவிலேயே அதிகபட்சமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நோயாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4. முதலீடுகள் – கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ரூபாய் 3000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

5. அத்திக்கடவு அவினாசி திட்டம்- எம்ஜிஆரின் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நனவாக்கி உள்ளார்.

6. மருத்துவ கல்லூரிகள் – தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் மருத்துவக் கல்வி என்பது சிரமமான ஒன்றாக இருக்காது என நம்பலாம்.

7. பிளாஸ்டிக் பைகளுக்கு தடை – ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த பிளாஸ்டிக் பைகளால் நிலத்தடி நீர் சேமிப்பு என்பது கேள்விக்குரியாகி உள்ளது. மக்கள் நலம் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

8. தேர்வுகள் ரத்து – கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பதினோராம் வகுப்பு தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு, தேர்ச்சி என்பதை காட்டிலும் மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

9. 6 புதிய மாவட்டங்கள் – தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதில் இருந்து தற்போது வரை 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

10. உழவன் ஆப் – விவசாயிகளின் விவசாயத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள உழவன் ஆப் என்ற செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விவசாய பெருமக்கள் தங்களின் குறைகளை கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

தீபாவளியும் இல்லை, பொங்கலும் இல்லை: 'அண்ணாத்த' ரிலீஸ் எப்போது?

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

கமல்-ரேகா கிஸ்ஸிங் காட்சியை கலாய்க்கின்றாரா பிக்பாஸ் சுரேஷ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்ரவர்த்தி முதலில் அனிதாவிடம் 'நியூஸ் ரீடர்ஸ்கள் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும்' எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

'முத்தையா' படம் வேண்டாம் விஜய்சேதுபதி: பிரபல இயக்குனர் அறிவுரை

பிரபல இலங்கை முன்னாள் பந்து வீச்சாளர் முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டது

சூரி பணமோசடி விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்!

நடிகர் சூரியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும் ரூ.2.7 கோடி ஏமாற்றியதாக கூறப்படும் புகாரில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

வாத்தி கம்மிங்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட 'கோமாளி' நடிகை

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் 'மாஸ்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து