நாளை மாணவர்களுக்கு விஜய் நடத்தும் பாராட்டு விழா.. திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
10,12 வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் சார்பில் பாராட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் மூன்று இடம் கிடைத்தவர்களுக்கு விஜய் பாராட்டு விழா நடத்தி பரிசளித்தார் என்ற நிலையில் இந்த ஆண்டும் அதே நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
முதல் கட்டமாக ஜூன் 28ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி. தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாளை இந்த விழா நடைபெற இருப்பதை அடுத்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அடுத்த கட்டமாக ஜூலை 3ஆம் தேதி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments