தேர்தல் எதிரொலி: நாளை தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக நாளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன.
இந்த நிலையில் நாளை மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் நாளை காலை, மதியம் ஆகிய இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தேர்தல் என்பதால் இந்த வாரம் எந்த படமும் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகவில்லை என்பதும் நாளை மறுநாள் வெள்ளியன்று 'காஞ்சனா 3', 'வெள்ளைப்பூக்கள்', 'மெஹந்தி சர்க்கஸ்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com