நாளை வெளியாகிறது சன்னி லியோன் திரைப்படம்.. 'கோட்' வசூல் பாதிக்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் வேறு எந்த புதிய தமிழ் திரைப்படமும் நாளை வெளியாகவில்லை என்பதும் ‘கோட்’ திரைப்படமே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் எந்த தியேட்டரிலும் புதிய திரைப்படங்கள் எடுக்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் சன்னி லியோன் நடித்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் சில திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜாக்கி ஷெரப், சன்னி லியோன் மற்றும் பிரியாமணி உள்ளிட்டோர் நடித்த ’கொட்டேஷன் கிங்’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி ’இந்தியன் 2’ திரைப்படம் ரிலீசாகும் தேதியில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில் நாளை இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில தியேட்டரில் மட்டுமே ‘கொட்டேஷன் கிங்’ வெளியாவதால் ‘கோட்’ வசூலுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது
‘கொட்டேஷன் கேங்’ படத்தில் சன்னி லியோன் கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளதாகவும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளதாகவும் தெரிகிறது. ஜாக்கி ஷெரப், சன்னி லியோன், பிரியா மணி, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விவேக்குமார் கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
I am so delighted to announce the highly anticipated film, Quotation Gang (QG) , will be hitting theaters on 30 August 2024. Get ready for an unforgettable cinematic experience!"#ExcitingNews #QGMovie #QG #QuotationGang #QGmovieupdate #trending #sunnyleone #priyamani… pic.twitter.com/HExFWQTMjR
— Sunny Leone (@SunnyLeone) July 29, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com