நாளை 'தலைவர் 169' அப்டேட்? சன்பிக்சர்ஸ் டுவிட்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் ஸ்டார் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ படத்தின் அப்டேட் ஆகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள ’தலைவர் 169’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுவதால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் வெளியிடும் அப்டேட் ’தலைவர் 169’ படமா? அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வேறு படமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.