கனமழை எதிரொலி: 9 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

  • IndiaGlitz, [Tuesday,November 09 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்

இந்தநிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நவ 10,11) சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.