காவேரி மருத்துவமனைக்கு ரஜினி செல்வது எப்போது? புதிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நேற்றிரவு தற்காலிக பின்னடைவில் இருந்தாலும் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சீரானது.
இருப்பினும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அகில இந்திய அரசியல் தலைவர்களும், தமிழக அரசியல்வாதிகளும் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான திரையுலக பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நாளை ரஜினிகாந்த் சென்னை திரும்புவதாகவும், சென்னை வந்ததும் காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் விசாரிப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout