கொரோனாவை வாங்க மீன்மார்க்கெட்டில் குவிந்த சென்னை மக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று அசைப்பிரியர்கள் மட்டன், சிக்கன் வாங்க கடைகளில் அதிக கூட்டம் கூடுவதால் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என அரசு அறிவித்தது. ஆனால் ஞாயிறு கடை இல்லை என்றால் என்ன? சனிக்கிழமையே வாங்கி பிரிட்ஜில் வைத்து கொள்ளலாம் என கடந்த வாரமும் இந்த வாரமும் சிக்கன், மட்டன், மீன் கடைகளில் சனிக்கிழமையே கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த வாரம் சனிக்கிழமை விடிய விடிய சிக்கன், மட்டன் கடைகள் திறந்திருந்ததாகவும், அதிகாலை வரை விற்பனை ஜோராக நடந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் காசிமேடு மீன்சந்தையில் மீன் வியாபாரம் தொடங்க சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இன்று மீன் சந்தையில் மீன் வாங்க அதிகளவில் கூட்டம் கூடியதால் மேலும் ஒரு கோயம்பேடு நிலைமை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மீன் வாங்க வந்தவர்கள் கொரோனாவை வாங்காமல் வீடு திரும்ப வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் அச்சமாக உள்ளது.
நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே காசிமேடு மீன்சந்தையில் மொத்த வியாபாரிகள் குவிந்தனர். மேலும் கடந்த 15ஆம் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற நிலையில், ஏராளமான மீன்களின் வரத்து இருப்பதால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீஇருப்பினும் காசிமேடு மீன் பிடி துறைமுகம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சில்லரை விலையில் மீன் வாங்க பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments