யாருடன் கூட்டணி! கமல் கட்சியின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,December 21 2018]

பாரளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடவும் கூட்டணி அமைக்கவும் அரசியல் கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. இப்போதைக்கு திமுக-காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும் அதிமுக-பாஜக ஒரு கூட்டணியாகவும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதிபட கூறிவிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாரளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கவும், கூட்டணி குறித்து ஆலோசிக்கவும், நாளை செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை செய்யவுள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் வியூகம் குறித்தும் கூட்டணி குறித்தும் கமல் செய்தியாளர்களிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நீதிமன்ற உத்தரவுக்கு பின் திறக்கப்பட்ட அலுவலகத்தில் விஷால்

தயாரிப்பாளர் சங்கம் நேற்று வட்டாட்சியர் அவர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் விஷால் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' சென்சார் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில்

தல அஜித்தின் விஸ்வாசம்: எந்தெந்த ஏரியா யாருக்கு?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' திரைப்படம் எந்தவித சந்தேகமும் இன்றி பொங்கல் தினத்தில் வெளியாகவிருப்பது

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் காலமானார்

தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார்