நாளை அஜித், விஜய், யுவன் நாள்.. வைரலாகும் வெங்கட்பிரபுவின் பதிவு..!
- IndiaGlitz, [Friday,August 30 2024]
நாளை அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி அஜித், விஜய் மற்றும் யுவன் ஆகிய மூவருக்கும் மிகச்சிறந்த நாள் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அஜித் நடித்த ’மங்காத்தா’ என்ற திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 31ஆம் தேதி என்பதால் ’மங்காத்தா’ படம் வெளியாகி 13 வருடம் நிறைவடைந்த நாள் என்பதை வெங்கட் பிரபு தனது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
அது மட்டுமின்றி நாளை ஆகஸ்ட் 31ஆம் தேதி யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் என்பதால், தனது சகோதரர் யுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் நாளாகவும் நாளை அமைந்துள்ளது என்று வெங்கட் பிரபு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் நாளை தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ படத்தின் 4வது சிங்கிள் வெளியாகும் நாள் என்பதால் நாளைய தினம் அஜித், விஜய் மற்றும் யுவன் ஆகிய மூவருக்கும் மிகச் சிறந்த நாள் என்றும், இதைவிட வேறு எதுவும் எனக்கு பெரியது இல்லை என்று வெங்கட் பிரபு பதிவு செய்துள்ள நிலையில், இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Tomorrow #mankatha day!!! @thisisysr bday!! And our fav #GOAT4thSingle release!!! It can’t get BIGGER than this for me!!! #TheGreatestOfAllTime #aVPhero pic.twitter.com/ylZzVhoMPp
— venkat prabhu (@vp_offl) August 30, 2024