நாளை அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சூப்பர் அறிவிப்பு வரப்போகுது..!

  • IndiaGlitz, [Tuesday,February 13 2024]

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு நாளை காலை 9.09 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஒரு பக்கம் அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் எந்த அப்டேட்டையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்னொரு பக்கம் அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் நாளை காலை 9.09 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனேகமாக அஜித் நடிக்க இருக்கும் 63வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித் ஜோடியாக ’கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திற்கு பிறகு தபு நடிக்க இருப்பதாகவும் அதுமட்டுமின்றி ஸ்ரீநிதி ஷெட்டி இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் நாளைய அறிவிப்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.