close
Choose your channels

நாளை காலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு: 'மாஸ்டர்' மாளவிகாவின் வைரல் வீடியோ!

Sunday, February 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. மேலும் அவர் ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு நாளை காலை 10.30 மணிக்கு எனது அடுத்த படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு, ஒரு முழுமையான ஆக்ஷன் மற்றும் த்ரில் படத்திற்காக ரசிகர்கள் தயாராகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் சித்தார்த் சதுர்வேதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை ரவி உதய்வார் என்பவர் இயக்க இருக்கிறார் என்று செய்தி வந்த நிலையில் அந்த திரைப்படத்தின் அறிவிப்புதான் நாளை வெளிவர இருப்பதாக மாளவிகா குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment