நாளை காலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு: 'மாஸ்டர்' மாளவிகாவின் வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. மேலும் அவர் ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு நாளை காலை 10.30 மணிக்கு எனது அடுத்த படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு, ஒரு முழுமையான ஆக்ஷன் மற்றும் த்ரில் படத்திற்காக ரசிகர்கள் தயாராகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் சித்தார்த் சதுர்வேதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை ரவி உதய்வார் என்பவர் இயக்க இருக்கிறார் என்று செய்தி வந்த நிலையில் அந்த திரைப்படத்தின் அறிவிப்புதான் நாளை வெளிவர இருப்பதாக மாளவிகா குறிப்பிட்டுள்ளார்.

More News

காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்: சாக்சி அகர்வாலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

காதலர் தினமான இன்று திரை உலக பிரபலங்களும் காதலர்களும் தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 

மனைவி ஐஸ்வர்யாவை தனுஷ் எடுத்த ஸ்பெஷல் புகைப்படம்!

கோலிவுட் திரையுலகில் உள்ள பலரும் இன்று காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

'காதலர் தினத்தில் காதலை பகிர்ந்து கொள்கிறேன்': ப்ரியா பவானிசங்கரின் ரொமான்ஸ் புகைப்படம்!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலக காதலர்களும் தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஜூனியர் சிரஞ்சீவி புகைப்படத்தை வெளியிட்ட மேக்னாராஜ்: அப்படியே உரித்துவைத்தால் போல் இருக்கும் குழந்தை!

ஆக்சன் கிங் அர்ஜுன் சகோதரரும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ்

'காதலர் தின' ஸ்பெஷலாக பூக்களால் மேலாடை அணிந்த தமிழ் நடிகை!

காதலர் தினத்தில் கோலிவுட் திரையுலக பிரமுகர்கள் தங்களது காதல் பதிவுகளை பதிவு செய்து வரும் நிலையில் தமிழ்த் திரையின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்