பிஞ்சு குழந்தைகளைத் தாக்கும் தக்காளி வைரஸ் நோய்… தமிழகத்திலும் பரவலா?

  • IndiaGlitz, [Sunday,May 08 2022]

கேரளாவில் 85 குழந்தைகள் புதியவகை வைரஸ் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் புதிய வகை வைரஸ் தாக்கம் காரணமாகத் தமிழகத்திலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 85 குழந்தைக்ள், தக்காளி காய்ச்சல் எனும் புதிய வகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு காய்ச்சல், உடல்வலி, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொற்றும் தன்மையுள்ள இந்த நோய் பரவலின் காரணமாக ஆரியக்காவு, நெடுவதூர் போன்ற பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்புதிய நோய் பாதிப்பு குறித்து பேசியுள்ள மருத்துவர்கள் கொசுக்கடியால் உருவாகும் சிக்கன்குனியாவின் பின்விளைவாக இது இருக்கலாம் என்று கூறியதோடு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் தக்காளி காய்ச்சல் பரவல் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தப் புதிய வைரஸ் நோய் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் புதிய வகை தொற்று. நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவினால் இது பரவுகிறது. தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தென்படுவதால் இதற்கு தக்காளி வைரஸ் என்று பெயர். இப்புதிய வைரஸ் நோய் பாதிப்பிற்கும் தக்காளி பழத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியதோடு தமிழகத்தில் இந்நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

More News

'அஜித் 61' படத்தில் நடிப்பது உண்மையா? மஞ்சுவாரியர் அளித்த பதில்!

பிரபல மலையாள நடிகையும் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தில் நடித்தவருமான மஞ்சுவாரியர் 'அஜித் 61' படத்தில் நடிப்பது உண்மையா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

'டான்' சென்சார் தகவல்: இந்த படத்திற்கு சென்சார் கொடுத்த சிறப்பு என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் 'டான்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

'டான்' சென்சார் தகவல்: இந்த படத்திற்கு சென்சார் கொடுத்த சிறப்பு என்ன தெரியுமா?

சிவகார்த்த

'அஜித் 61' படத்தில் இணைந்த 'சார்பாட்டா பரம்பரை' நடிகர்

அஜித்தின் நடித்து வரும் 'அஜித் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் 'சார்பாட்டா பரம்பரை' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல்

சம்மரில் நீச்சல் தான் சுகமானது: நீச்சலுடையில் செம போஸ் கொடுத்த தமிழ் நடிகை!

தமிழ் நடிகை ஒருவர் நீச்சல் தான் கோடை காலத்தி மிகவும் சுகமானது என்று கூறி நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.