தக்காளி வியாபாரத்தில் 20 நாட்களில் ரூ.30 லட்சம் லாபம்.. வியாபாரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி முடிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தக்காளி வியாபாரம் செய்த வியாபாரி ஒருவர் 20 நாட்களில் ரூ.30 லட்சம் லாபம் ஈட்டிய நிலையில் அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தக்காளி விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை ஏற்பாடு செய்யும் வியாபாரிகள் உட்பட ஒரு சில அபூர்வமான செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்ற பகுதியில் ராஜசேகர் ரெட்டி என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த தக்காளிகளை அறுவடை செய்து 20 நாட்களில் 30 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் தனது தோட்டத்தில் தக்காளியை பாதுகாத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் நேற்று கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது தோட்டத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தக்காளி விற்பனை மூலம் அவர் சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிக்க கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout