ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் டாம் க்ரூஸின் கார் திருட்டு… படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
“மிஷன்:இம்பாசிபிள்“ வரிசை படங்களில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் நடிகர் டாம் க்ரூஸ். தற்போது இந்த வரிசையில் “மிஷன்: இம்பாசிபிள் 7“ படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரிட்டனில் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுவருகிறார்.
இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் டாம் க்ரூஸின் விலையுயர்ந்த BMW x7 கார் மற்றும் 1,000 பவுண்ட்ஸ் மதிப்புள்ள உடைமைகள் திருடப்பட்டு உள்ளன. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் காரில் பொருத்தப்பட்டு இருக்கும் மின்ன்ணு கருவியைப் பயன்படுத்தி உடனடியாகக் காரை மீட்டுள்ளனர். ஆனால் காரில் இருந்த உடைமைகள் அனைத்தும் திருடப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற நடிகர் ஒருவரின் கார் திருடப்பட்டு பின்னர் மீட்கப்பட்டச் சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் டாம் க்ரூஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு பர்மிங்காம் நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் உணவருந்திய செய்தியும் சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது.
இந்தியாவின் பிரபல பாடகி ஆஷா போஸ்லே பர்மிங்காம் சாலையில் “பிர்மிங்காம்“ எனும் பெயரில் இந்திய உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். இந்த உணவகத்திற்கு கடந்த சனிக்கிழமை வந்த நடிகர் டாம் க்ரூஸ் சிக்கன் டிக்காவை ஆர்டர் செய்து விரும்பி சாப்பிட்டாராம். அதோடு 2 ஆவது பிளேட் சிக்கன் டிக்காவை ஆர்டர் செய்யும்போது இன்னும் கூடுதலாக காரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். இதுகுறித்த புகைப்படங்களும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments