ஓடும் ரயிலில் படப்பிடிப்பு.. பதைபதைக்கும் காட்சிகள்: 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் மேக்கிங் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த ‘மிஷன் இம்பாஸிபிள்’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. ‘மிஷன் இம்பாஸிபிள்’ திரைப்படத்தின் டிரைலரில் ரயில் காட்சிகள் திரில்லிங்காக இருந்ததை பார்த்த நிலையில் அந்த காட்சி படமாக்கப்பட்டது எப்படி என்பது இந்த மேக்கிங் வீடியோ மூலம் கூறப்பட்டுள்ளது.
பார்க்கும் நமக்கே த்ரில்லிங்காக இருக்கும் நிலையில் இந்த காட்சியில் அசால்டாக டாம் குரூஸ் நடித்துள்ளதும் அதை மிகவும் ரிஸ்க்கான முறையில் படம் ஆக்கியதும் இந்த மேக்கிங் வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள நிலையில் இந்த படம் வசூலில் உலகம் முழுவதும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்டோபர் மெக்குவாரி என்பவரின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் டாம் குரூஸ், ஹெய்லே அட்வெல், சைமன் பெக், ரெபாகோ பெர்குசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
This train sequence was tricky, but the outcome made it all worth it. I can't wait for everyone to see it come to life! pic.twitter.com/z067kFLIku
— Tom Cruise (@TomCruise) July 5, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com