விமானம் பறக்க… 5 நிமிட கரகோஷத்தில் நனைந்த நடிகர் டாம் குரூஸ்… நெகிழ்ச்சி தருணம்!

பிரான்ஸ் நகரில் 75 ஆவது கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ஸ்டண்ட் காட்சிகளுக்குப் பெயர்போன பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்க்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் மரியாதை செய்யப்பட்டு “பால்ம் டிஓர்“ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான டாம் குரூஸ் ஏற்கனவே ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பிரிட்டிஷ் அகாடமி விருது போன்ற பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறார். மேலும் இவருடைய ஸ்டண்ட் காட்சிகளுக்கு உலகம் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் “டாப் கன்டாப் கன்: மேவெரிக்“ படத்திற்காக இவருக்கு கேன்ஸ் திரைப்படக் குழு வழங்கும் “பால்ம் டிஓர்” விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு உள்ளது.

35 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மேவெரிக் படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படத்தில் டாம் குரூஸ், பீட் மேவெரிக் மிட்செல் எனும் பெயரில் மூத்த டெஸ்ட் பைலட்டாக நடித்துள்ளார். இவருடைய சாகசமான நடிப்பை பார்த்து கேன்ஸ் விழாக்குழு பாராட்டிய நிலையில் மிக உயரிய விருதான பால்ம் டிஆர் விருதும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விருதை வழங்கும்போது யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் கேன்ஸ் விழா சார்பாக வானத்தில் 6 போர் விமானங்கள் பறக்கவிடப்பட்டது. மேலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் தொடர்ந்து கரவொலியை எழுப்பினர். இதனால் நடிகர் டாம் குரூஸ் கண்ணீர் சிந்தி தனக்கு வழங்கப்பட்ட விருதைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் விழா மேடையில் பேசிய அவர், பாராமவுண்ட் மக்களுக்கு நன்றி. இப்படி உங்கள் முன்னால் நிற்பது எனது நீண்டநாள் கனவு. இந்த மாலை நேரத்தை வாழ்வில் என்னால் மறக்கவே முடியாது என்றும் நெகிழ்ச்சிப் பொங்க பேசினார்.

More News

'வாயாடி பெத்த புள்ள' ஆராதனா பாப்பா இப்படி வளர்ந்துட்டாங்களே: லேட்டஸ்ட் புகைப்படம்!

'வாயாடி பெத்த பிள்ளை' என்ற பாடலை பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாப்பா கிடுகிடுவென வளர்ந்துள்ளது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து தெரியவருகிறது .

குடும்பத்துடன் துபாய் சென்ற நெல்சன்: உடன் சென்ற நடிகை யார் தெரியுமா?

இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவருடன் பிரபல நடிகை, பிரபல நடிகர் மற்றும் சிலரும் சென்றுள்ளனர். 

சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படத்தின் டைட்டில் இதுவா? 

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையதளங்களில் கசிந்தது வைரலாகி வருகிறது .

மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் இசையமைப்பாளர்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் ஒருவர் தனது மகளுடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கணவர் சினேகனின் முத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னிகா: வைரல் வீடியோ

நடிகை கன்னிகாவுக்கு அவரது கணவர் சினேகன் முத்தம் கொடுத்த நிலையில் முத்தம் கொடுத்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவு செய்ய மாட்டேன் என்றும் கெட்ட வார்த்தைகளில் கமெண்ட்ஸ்