சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த தெலுங்கு திரையுலக பிரபலம்

  • IndiaGlitz, [Friday,October 14 2016]

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டாவது வெற்றிகரமான வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 11ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, பஹத் பாசில், சினேகா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோஹினி, தம்பி ராமையா மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை மோகன்ராஜா இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காஸ்ட்யூம் டிசைனர் நீராஜா கோனா தற்போது இணணந்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகளுடன் பணியாற்றிய இவர் பணிபுரியும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பணிபுரிவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக நீரஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

'பைரவா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

மீண்டும் செல்வராகவன் படத்தில் இணைந்த தனுஷ்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ளார்...

நயன்தாராவை நான் காதலிக்கவில்லை

கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள 'காஷ்மோரா' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

சிவகார்த்திகேயன் - நயன்தாரா படப்பிடிப்பு தொடங்கும் நாள் அறிவிப்பு

24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்...

சிவகார்த்திகேயனின் 'ரெமோ' வசூல் நிலவரம்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.