close
Choose your channels

இயக்குனர் சசிக்கு கிடைத்த சர்ப்ரைஸ் வாய்ப்பு

Sunday, August 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சொல்லாமலே' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குனராகிய இயக்குனர் சசி, அதன்பின்னர் 'ரோஜாக்கூட்டம்', டிஷ்யூம், 'பூ', '555' ஆகிய படங்களை இயக்கியிருந்தாலும், சமீபத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' என்ற ஒரே படம் அவரை முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைத்துள்ளது.
இந்த படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது. வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே செலவு செய்து தெலுங்கில் டப் செய்யப்பட்ட இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் ரூ.25 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர்கள் சசியின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், சசியிடம் ஒரு கதை கேட்டுள்ளதாகவும் மிகவிரைவில் வெங்கடேஷ்-சசி இணையும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment