அல்லு அர்ஜுனுக்கு இன்று கிடைத்த இரண்டாவது புரமோஷன்

  • IndiaGlitz, [Tuesday,November 22 2016]

தமிழ் ரசிகர்களுக்கு 'ருத்ரம்மாதேவி' படத்தின் மூலம் அறிமுகமான பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் விரைவில் பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் இவர் விரைவில் தமிழிலும் வெற்றிகரமான நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களுக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே அல்லு அர்ஜூன் - சினேகா ரெட்டி தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அல்லு அர்ஜூன் தந்தை என்ற புரமோஷனை பெற்றுள்ளார்.
இதுகுறித்து அல்லு அர்ஜூன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'பெண் குழந்தை பிறந்துள்ளதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளோம். ஒரு ஆண், ஒரு பெண் போதும். இதற்கு மேல் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி' என்று கூறியுள்ளார். அல்லு அர்ஜூன் - சினேகா தம்பதியின் புதுவரவான பெண் குழந்தைக்கு நமது வாழ்த்துக்கள்

More News

'கவலை வேண்டாம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள்

ஜீவா நடிப்பில் டிகே இயக்கிய 'கவலை வேண்டாம்' வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய்யை நான் இன்னும் காதலிக்கின்றேன். அமலாபால்

இந்த ஆண்டின் மிக ஹாட் செய்தி விஜய்-அமலாபால் பிரிவாகத்தான் இருக்கும். 'தெய்வத்திருமகள்' படத்தின்போது...

விரைவில் வருகிறது கூகுள் கண். கேமராவாக மாறும் கண்கள்

கண்பார்வை குறைபாடு உள்ளவர்களின் குறையை போக்க கண்தானம் செய்ய வேண்டும் என்று இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் விழிப்புணர்வு...

கத்திச்சண்டை' ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' திரைப்படம் நவம்பர் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது...

நாளை முதல் அஜித்துடன் இணைகிறார் அக்சராஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன், அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தில்...