கொரோனாவுக்கு பலியான பிரபல காமெடி நடிகர்: திரையுலகம் அதிர்ச்சி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் திரையுலகினர் எதையும் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திரை உலக பிரமுகர்களான அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ராஜமவுலி, விஷால் உள்பட பலர் பாதிக்கப்பட்டு அதன் பின் உடல்நிலை தேறி வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒருசில திரையுலக பிரமுகர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி பிரபல தெலுங்கு நடிகர் வேணுகோபால் கோசுரி என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் மரணமடைந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கிய பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள வேணுகோபால் கோசுரி மறைவு தெலுங்கு திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் பலர் தங்கள் சமூக வலைதளங்களிலும் நடிகர் வேணுகோபால் கோசுரிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் உண்டா? அவரே அளித்த விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள்

சாதாரண பாஸ்போட்டை மட்டும் வைத்து 16 நாடுகளுக்குச் செல்ல முடியும் தெரியுமா??? அதிகாரப்பூர்வத் தகவல்!!!

இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட பாஸ்போட்டை வைத்துக்கொண்டு விசாவே இல்லாமல் 16 நாடுகளுக்கு செல்ல முடியும் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது.

சுடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2,000 ஆண்டு பழமையான நச்சில்லாத மது… தெறிக்கவிடும் தகவல்!!!

சீனக் கல்லறை ஒன்றில் இருந்து 2 ஆயிரம் பழமையான மது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீனாவின் ஹெனான் மாகாணத்தில்

எமிஜாக்சன் வீட்டில் முக்கிய விசேஷம்: வைரலாகும் வீடியோ

இயக்குனர் விஜய் இயக்கிய 'மதராச பட்டணம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்யின் 'தெறி' உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை எமிஜாக்சன்.

விஜயகாந்த் உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு: கொரோனா குறித்தும் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.