தேசிய விருதை புறக்கணித்த 'டூலெட்' இயக்குனர் செழியன்: காரணம் என்ன?

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

சமீபத்தில் தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு விருது அறிவிப்பில் தமிழக திரைப்பட துறை புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழுக்கு வெறும் நான்கு விருதுகள் மட்டுமே கிடைத்ததால் தமிழ் திரையுலகம் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. சிறந்த தமிழ் மொழி படமாக 'டூலெட்' படமும், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசையமைப்பாளர் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மானும், சிறந்த பாடகியாக 'காற்று வெளியிடை படத்தில் பாடிய சாஷா திரிபாதியும் இந்த ஆண்டுக்கான விருதினை பெற்றுள்ளனர். 

இந்த நிலையில் இவ்வாண்டு தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், வெறும் 11 பேர்களுக்கு மட்டுமே விருது வழங்குவார் என்றும் பிற கலைஞர்களுக்கு குடியரசு தலைவருக்கு பதிலாக வேறொருவர் விருது வழங்குவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க சுமார் 60க்கும் மேற்பட்டோர் முடிவு செய்திருப்பதாகவும், அவர்களில் 'டூலெட்' படத்தின் இயக்குனர் செழியனும் ஒருவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தேசிய விருது பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர் தனது கையால் விருது அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

More News

விஜய்யிடம் இரண்டு கதைகள் கூறி காத்திருக்கும் பிரபல இயக்குனர்

'ராம்' மற்றும் 'பருத்திவீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ராம், தற்போது தனுஷின் 'வடசென்னை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் புதிய உத்தரவு

காவிரி விவகாரம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமா?

ரோட்டுக்கடையில் ஆம்லேட் போட்ட பிரபல தமிழ் நடிகர்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அட்டகாசமாக தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆனவர் நடிகர் அருண்விஜய்.

பூங்கா உரிமையாளரின் கழுத்தை கவ்வி இழுத்து சென்ற சிங்கம்: அதிர்ச்சி தகவல்

தென்னாப்பிரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றின் உரிமையாளரான மைக் ஹோட் என்பவரை அந்த பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்று கழுத்தை கவ்வி இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நாயகியின் திருமண தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான 'ராஜண்ணா' படத்தின் நாயகியும், பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூரின் மகளுமான சோனம்கபூரின் திருமண தேதி அதிகாரபூர்வமாக கபூர் குடும்பத்தினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.