கண்ணாடி சுவர்களால் ஜொலிக்கும் கழிப்பறை… உள்ளே செல்ல பொதுமக்கள் ஆர்வம்… அடக் கொடுமையே!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
எதிலும் புதுமையை எதிர்பார்க்கும் ஜப்பான் காரர்கள் தற்போது தலைநகர் டோக்கியோவில் உள்ள இரு பூக்காக்களில் கண்ணாடி சுவர்களால் ஆன பொதுக் கழிப்பறைகளை கட்டி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதிலும் மக்களுக்கு பொதுகழிப்பறைகள் மீதுள்ள மதிப்பீட்டை மாற்றுவதற்காக இந்த ஏற்பாடாம். கேட்டால் தலையே சுத்துகிறது இல்லையா? ஆனால் பூக்காக்களுக்கு வரும் பொதுமக்கள் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்த பெரிதும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனராம். காரணம் அந்த கழிப்பறைக்குள் யாராவது சென்றால் உடனே ஒளிப்புகாதவாறு அந்தக் கழிப்பறை தன்னை மாற்றிக்கொள்ளும் தொழில் நுட்பத்தால் அமைக்கப் பட்டிருக்கிறதாம்.
ஸ்மார்ட் கிளாஸ் என்ற உயர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்டிருக்கும் கண்ணாடி சுவர்களால் ஆன கழிப்பறைகளுக்குள் யாரும் இல்லாத நேரத்தில் வெளிப்படையாக அப்படியே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆட்கள் உள்ளே நுழையும்போதே அறைக்குள் இருக்கும் ஒளிமங்கி வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே நடப்பது தெரியாதவாறு மாறிவிடுகிறது. மற்ற நேரங்களில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் பெரிய பிரம்மாண்டத்தையும் இந்தக் கழிப்பறைகள் வெளிப்படுத்துகின்றன.
ஷிபூயா பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கழிப்பறைகள் டோக்கியோவின் டாய்லட் திட்டத்தின்கீழ் வடிவமைக்கப் பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுக் கழிப்பறைகள் மீது மக்கள் கொண்டுள்ள குறைவான மதிப்பீட்டை இந்தத் திட்டம் முற்றிலும் மாற்றிவிடும் எனவும் நம்பப்படுகிறது. அதோடு கழிப்பறைகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை மிக எளிதாகத் தெரிந்து இந்த முறை உதவும் எனவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments