கொரோனா வைரஸ் எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகமெங்கும் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி அடுத்த ஆண்டு நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி டோக்கியோவில் தொடங்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் பரிந்துரையை ஏற்று ஓராண்டு ஒத்திவைக்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் உள்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வரும் நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments